"இதை நான் எச்சரிக்கையாவே கூறுகிறேன்"-ஊழல் அதிகாரிகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் காட்டம்

"இதை நான் எச்சரிக்கையாவே கூறுகிறேன்"-ஊழல் அதிகாரிகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் காட்டம்
"இதை நான் எச்சரிக்கையாவே கூறுகிறேன்"-ஊழல் அதிகாரிகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் காட்டம்
Published on

அதிமுக ஆட்சியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்துள்ள அம்முண்டி சர்க்கரை ஆலை பகுதியில் இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டார். அப்போது அமைச்சர் பேசுகையில்...

"அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது. இது குறித்து முறையான விசாரணை தொடங்க உள்ளது. இந்நிலையில் காட்பாடி அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அந்த முறைகேடுகளை முறையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.

இதை நான் எச்சரிக்கையாவே கூறுகிறேன். அப்போது தான் இந்த ஆலை மீண்டும் நல்லபடியாக இயங்கும். காரணம் இந்த ஆலையை கொண்டு வந்தவன், நான். இதுவரை இந்த ஆலை நிர்வாகத்தில் தலையிட்டது இல்லை. யாரையும் நான் வேலைக்கு சேர்ந்ததும் இல்லை. இப்படி சுத்தமாக இருந்தது கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த அதிகாரிகளால் முறைகேடு நடத்தப்பட்டுள்ளது. எனவே தற்போதுள்ள அதிகாரிகள் உஷாராக பணியாற்ற வேண்டுமென எச்சரித்தார்.

தோடர்ந்து பேசிய அவர், சேர்க்காடு பகுதியில் இந்த ஆண்டு அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்படும். 100 படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை பொன்னை பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி விரைவில் துவங்கவுள்ளது. மகி மண்டலம் பகுதியில் தொழிற்பேட்டை இந்தாண்டு கொண்டு வரப்படும்" என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com