லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: விசாரணைக்கு ஒத்துழைக்காத சென்னை தொழிலதிபர் வீட்டிற்கு சீல்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: விசாரணைக்கு ஒத்துழைக்காத சென்னை தொழிலதிபர் வீட்டிற்கு சீல்
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: விசாரணைக்கு ஒத்துழைக்காத சென்னை தொழிலதிபர் வீட்டிற்கு சீல்
Published on

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளான கே.சி வீரமணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த தொழிலதிபர் ராம ஆஞ்சநேயலுவிற்கு சொந்தமான சூளைமேடு வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி மற்றும் அவருக்கு நெருங்கிய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி-க்கள் கிருஷ்ணா ராஜன் மற்றும் ஜோய் தயால் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

குறிப்பாக சூளைமேடு கில் நகர் விரிவாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள கே.சி வீரமணியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தொழிலதிபரான ராம ஆஞ்சநேயலுவுக்குச் சொந்தமான இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொள்ள வந்தபோது அந்த வீட்டில் யாருமில்லாமல் பூட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து ராம ஆஞ்சநேயலுவுக்கு தொலைபேசி வாயிலாக நேரில் வந்து சோதனை மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் நெடுநேரமாகியும் ராம ஆஞ்சநேயலு நேரில் வராமலும் சோதனை செய்ய வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்காமலும் இருந்து வந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் ராமசாமி மற்றும் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் அவ்விடத்தைப் பூட்டி சீல் வைத்து, அது தொடர்பான அறிவிப்பாணையையும் வீட்டின் முகப்பில் ஒட்டியுள்ளனர்.

மேலும், ராம ஆஞ்சநேயலு நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்காத வரை சீல் அகற்றப்படமாட்டாது எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com