கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் முன்னாள் ஆணையர் பவுன்ராஜ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வால்பாறை நகராட்சி ஆணையராக இருந்தபோது தனது பதவியை பயன்படுத்தி 15 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு கோவை மாவட்ட குற்றபிரிவில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வால்பாறை நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் மீது புதியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான வழக்குப்பதிவு விசாரணையின் ஒரு பகுதியாக இவ்வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வேலுமணி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இம்மோசடிகள் நடந்திருக்கலாம் என கூறப்படுவதால் இந்த வழக்குப்பதிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.