நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) பொதுச் செயலாளார் டிடிவி தினகரன், தேனி தொகுதியில் வேட்பாளராக நிற்கின்றார்.
இந்நிலையில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, அவருக்காக வாக்கு சேகரித்து பிரசாரம் செய்து வருகிறார். அப்படி இன்று அவர் பிரசாரத்துக்கு சென்றபோது, “ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக, டிடிவி தினகரன் வசமாகும்.
முதலிலேயே அதிமுக டிடிவி தினகரன் கையில் சென்றிருந்தால், ஸ்டாலின் முதலமைச்சராக இருந்திருக்கமாட்டார். அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி ஒப்பந்ததாரர்களுக்கு தாரைவார்த்து விட்டார்” என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இது அதிமுக-வினர் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.