"மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக காணாமல் போகும்"- அண்ணாமலை கடும் தாக்கு!

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுக இருக்காது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
அண்ணாமலைPT WEB
Published on

புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் 'ஜனநாயகப் பெருவிழா' என்ற பெயரில் தேர்தல் விழிப்புணர்வு பேருந்து ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் பயணித்து வருகிறது. அப்போது, தலைவர்களுடன் புதிய தலைமுறை என்ற பெயரில் சிறப்பு நேர்காணலும் நடத்தப்படுகிறது. கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.ஜி.புதூர் பகுதியில் புதிய தலைமுறை பேருந்தில் பேட்டியளித்த அண்ணாமலை, அதிமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார்.

அண்ணாமலை VS எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலை VS எடப்பாடி பழனிசாமி

அப்போது பேசிய அவர், "பாஜகவுக்கு ஒரு முறை வாய்ப்பளித்தால், இரு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தில் இருக்காது. 2024 தேர்தலுக்குப் பிறகு ஒரு திராவிடக் கட்சி மட்டும், நிச்சயம் இருக்காது. திமுகவை எதிர்ப்பதற்கென்றே ஒரு கட்சி தமிழகத்துக்குத் தேவையா என மக்கள் நினைப்பதாகக் குறிப்பிட்டார். தான் என்ற அகம்பாவத்துடனும், பெரியண்ணன் மனோபாவத்தோடும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடந்துகொள்கிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் பாஜகவின் தோல்விக்கு அதிமுகவின் ஊழலே காரணம்" என்றார்.

அண்ணாமலை
”மேல் பட்டன் போட்டு வாங்க..”-பெங்களூர் மெட்ரோவில் பயணம் செய்ய மறுக்கப்பட்ட இளைஞர்; மற்றொரு சம்பவம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com