இந்தியாவில் உள்ள சிறந்த உயிரியல் பூங்காவாக சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உயிரியல் பூங்கா இயக்குனர்களின் தேசிய மாநாடு கூட்டம் நடைபெற்றது. தேசிய மாநாட்டின் தொடக்க விழாவின் போது, இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களின் மதிப்பீடு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 82 சதவிகித மதிப்பீட்டுடன் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா சிறந்த உயிரியல் பூங்கா என்ற இடத்தை பெற்றுள்ளது.
இது குறித்து பேசியிருக்கும் தமிழக வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, இந்தியாவின் சிறந்த உயிரியல் பூங்காவாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம் என தெரிவித்துள்ளார்.