அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணை பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் நிதி மோசடி புகார் எழுந்தது. இதனையடுத்து அதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தக் குழுவில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளும் உள்ளனர். இந்த குழு ஏற்கெனவே எம்.ஆர்.சி நகரில் அலுவலகம் அமைத்து ஏராளமானோரை விசாரித்து வருகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது.