அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளின் மாற்றப்பட்ட கட்டணத்துக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பேராசிரியர்களின் ஊதியம், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, கல்விக் கட்டணத்தை உயர்த்த அண்ணா பல்கலைக் கழகம் கோரி இருந்தது. கட்டண உயர்வுக்கு மறுப்பு தெரிவித்த தமிழக உயர்கல்வித்துறை, அண்ணா பல்கலைக்கழகம் முன்வைத்திருந்த கட்டண உயர்வை சற்று குறைத்து, ஒப்புதல் அளித்தது.
அதன்படி, இளநிலை படிப்புக்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாயிவிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும், எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாயிலிருந்து 17 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
2019-20 கல்வியாண்டிலிருந்தே புதிய கட்டணத்தை அமல்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு, அண்ணா பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளுக்கு மட்டுமே பொறுந்தும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்புக் கல்லூரிகளுக்கு பொறுந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.