வெளிப்புற அழுத்தம் காரணமாக அனிதா தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் உள்ளது என தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முருகன், அனிதா மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். கடந்த 16ஆம் தேதி அனிதாவின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்ததாகவும் அனிதா மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் அறிக்கை கோரியுள்ளதாகவும் அவர் கூறினார். அரியலூர் மாவட்ட எஸ்.பியிடம் இருந்து முழு அறிக்கை கிடைத்தவுடன் ஆதி திராவிட ஆணையத்தின் பரிந்துரைகள் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.
அனிதா வெளிப்புற அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள எஸ்.பியிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முருகன் கூறினார். வேளாண் படிப்பிற்கு தயாரான சூழலில் அனிதா தற்கொலை செய்ய என்ன காரணம் என்று விசாரிப்பாதகவும், குடும்பசூழல் காரணமாக அனிதா தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை எனவும் முருகன் கூறினார்.