திருப்பூரில் காங்கேய இன கால்நடைகளுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த பாப்பம்பாளையம் பகுதியில், காங்கேய இன காளைகள் மற்றும் கிடாரிகள் பங்கேற்கும் கண்காட்சியானது இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வருகின்றது. செவலை, காரி, மயிலை என அனைத்து ரகங்களிலும் 8 பிரிவுகளின் கீழ் இந்த கண்காட்சியானது நடைபெற்று வருகின்றது.
கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிக்ளில் இருந்தும் கண்காட்சியில் பங்கேற்பதற்காக காங்கேய இன கால்நடைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாரம்பரியமிக்க நாட்டு மாடு இன வகைகளின் சிறப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நோக்கில், இது போன்ற கண்காட்சிகள் நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர். சுமார் 200 க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சியில், தேர்வு செய்யப்படும் சிறந்த மாடுகளுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.