கிருஷ்ணகிரி: டெம்போ வாகனம் மோதி 4 வயது அங்கன்வாடி குழந்தை உயிரிழப்பு

டெம்போ வாகனம் மோதி அங்கன்வாடி பெண் குழந்தை உயிரிழப்பு. கவனக்குறைவாக செயல்பட்டதாக அங்கன்வாடி பணியாளர் மற்றும் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம், மாவட்ட ஆட்சியர் உத்தரவு
சிறுமி சான்விகா
சிறுமி சான்விகாபுதியதலைமுறை
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வானமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மது (28). இவரது மகள் சான்விகா (04) வானமங்கலம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். பள்ளி இடைவேளை நேரத்தில் பள்ளி மாணவர்கள் சிறுநீர் கழிக்க பள்ளி அருகே உள்ள சாலைக்கு சென்றுள்ளனர். அப்போது சிறுமி சான்விகாவும் மாணவர்களுடன் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.

சிறுமி சான்விகா
சிறுமி சான்விகா

அந்த நேரத்தில் அந்த சாலை வழியாக சென்ற டெம்போ வாகனம் சிறுமி சான்விகா மீது மோதியுள்ளது. இதில் சிறுமிக்கு தலையில் அடிபட்டு அலறி துடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து தேன்கனிகோட்டை காவல் துறையினர் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

சிறுமி சான்விகா
நெல்லை: மாணவர்களிடையே முன்விரோதம் - அச்சுறுத்த அரிவாளுடன் வந்த பத்தாம் வகுப்பு மாணவர்

சிறுநீர் கழிக்க சென்றபோது சிறுமி மீது டெம்போ வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம், அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக அங்கன்வாடி மையத்தில் கண்காணிப்பாளர் பரிமளம் மற்றும் அங்கன்வாடி பணியாளர் வரலட்சுமி ஆகிய இருவரையும் மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com