திருப்பதியில் 4 தமிழர்கள் கைது : வானத்தில் சுட்டுப்பிடித்த ஆந்திர போலீஸ்

திருப்பதியில் 4 தமிழர்கள் கைது : வானத்தில் சுட்டுப்பிடித்த ஆந்திர போலீஸ்
திருப்பதியில் 4 தமிழர்கள் கைது : வானத்தில் சுட்டுப்பிடித்த ஆந்திர போலீஸ்
Published on

செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த 4 பேர் திருப்பதி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருப்பதி அடுத்த ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல் அதிகாரி வாசு தலைமையில் ரோந்து சென்றனர். இன்று அதிகாலை செம்மரங்களை எடுத்துக்கொண்டு வந்த ஒரு கும்பலை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் அனைவரும் தப்பி ஓட முயன்ற நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா ஜவ்வாது மலையை  சேர்ந்த சிவக்குமார், ஏழுமலை, மாணிக்கம் மகன் சேகர் ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர்.  தப்பி ஓடிய மற்ற நபர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 21 செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று கடப்பா மாவட்டம் சித்தவட்டம்  மண்டலம் ராலபோடுகு என்ற வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்மரங்களை வெட்டி கொண்டிருந்த  70க்கும் மேற்பட்ட தமிழர்கள் கூலிகளாக பணிபுரிவதை அறிந்து அவர்களை சரணடையும்படி எச்சரித்தனர். எச்சரிக்கையை மீறி அவர்கள் கற்களை காவலர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் பல வனத்துறையினர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வன காப்பாளர் அசோக்  உயிரிழந்தார். மற்றவர்களுக்கு மருத்துவ மனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் காவலர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பயந்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் வனப்பகுதிக்குள் ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு கூடுதலாக 40 காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு தப்பியோடியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சித்தவட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com