மாண்டஸ் புயலால் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, பூமிக்குள் புதைந்திருந்த பழங்கால கடல்வழி சாலை தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கடற்கரையோர பகுதிகளில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய கற்களால் ஆன கடல்வழி சாலை தற்போது வீசிய மாண்டாஸ் புயலால் கண்டறியப்பட்டுள்ளது.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்கள், சோழர்கள் கடல் வழியாக வாணிபம் செய்வதற்காக தனுஷ்கோடியில் இருந்து தூத்துக்குடி வரை கடற்கரையோர சாலை அமைத்து அதன் வழியாக பல்வேறு வகையான வர்த்தக வாணிபங்கள் நடைபெற்றதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், அதற்காக முன்னோர்கள் ஏற்படுத்திய பழமையான சாலை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அந்த சாலை தற்போது, கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் தற்போது தெரிந்து வருகிறது. இதனை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, தமிழர்களின் வரலாற்றை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.