மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பல சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்ந்து கொண்டு ஆக்டிவாக இருப்பவர். தற்போது பெருவுடையார் கோவில் என்றும் அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை வியந்து ஒரு பாராட்டிய பதிவைப் பகிர்ந்துள்ளார்.
ஷ்ராவன்யா ராவ் பீட்டி எனும் பிரபல டிசைனர் பதிவிட்ட தஞ்சை பெரிய கோவில் பற்றிய சிறிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சோழ சாம்ராஜ்யத்தின் சாதனைகளும் மற்றும் அவர்களது கட்டிட அறிவுத்திறமையும் வியக்கதக்கதாக உள்ளது’’ என பதிவிட்டுள்ளார்.
ஷ்ராவன்யா ராவ் பீட்டியின் இப்பதிவைப் பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா,’ உலக அளவில் நமது சரித்திரத்தை கொண்டு செல்ல மறந்துவிட்டோம். சோழப் பேரரசு எவ்வளவு சாதனை படைத்தது, சக்தி வாய்ந்தது மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியது என்பதை நாம் உண்மையில் உள்வாங்கவில்லை என் நினைக்கிறேன். உலக அளவில் தஞ்சை கோயிலுக்குக் கிடைக்க வேண்டிய எந்த பாராட்டும் இன்னும் கிடைக்கவில்லை என்பதே உண்மை’’ என்று தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா தஞ்சை கோயிலின் அம்சங்கள் மற்றும் முக்கியத்துவம் பற்றி பேசுவது தமிழ்நாட்டை சேர்ந்த அனைவருக்கும் பெருமை கொள்ளக்கூடிய விஷயம் என்று சமூக ஊடகங்களில் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.