மரம் நடுவதில் ஆர்வம் காட்டும் முதியவர்: அரை நூற்றாண்டில் ஆயிரக்கணக்கில் மரங்கள்

மரம் நடுவதில் ஆர்வம் காட்டும் முதியவர்: அரை நூற்றாண்டில் ஆயிரக்கணக்கில் மரங்கள்
மரம் நடுவதில் ஆர்வம் காட்டும் முதியவர்: அரை நூற்றாண்டில் ஆயிரக்கணக்கில் மரங்கள்
Published on

நெல்லையை சேர்ந்த முதியவர் ஒருவர், இயற்கையின் மீதுள்ள காதலால் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு, பசுமைக்காவலர் என்று பெயர் பெற்றுள்ளார். 

சாலையோரங்கள், பூங்காங்கள் என பொதுஇடங்களில் மரங்களை நட்டு பசுமையை பாதுகாக்கும் பணியை மேற்கொள்பவர் 71 வயதாகும் கண்ணையா.மாநில அரசுப்பணியாளராக இந்து ஓய்வு பெற்ற  இவருக்கு சிறுவயதில் இருந்தே மரங்களை நட்டு வளர்ப்பதில்தான் ஆர்வம் அதிகம். இதுவரை ஆயிரக்கணக்கான மரங்களை கண்ணையா நட்டுள்ளார்.கட்டாந்தரையாக இருந்த நெல்லை மாநகராட்சி பூங்காவை தம் கடின உழைப்பால் நண்பர்களின் உதவியோடு சோலை வனமாக மாற்றியுள்ளார் . பணி ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆகி விட்ட போதும் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் முன்னை விட துடிப்பாக செயல்பட்டு மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.

உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராமல் மரம் நடும் சேவையை தொடர்ந்து செய்வதாக கூறுகிறார் இந்த முதியவர்.70 வயதை கடந்தும் மரங்களுக்காக தனது நேரத்தை செலவிடும் கண்ணையா போன்றவர்கள் இளைய தலைமுறையினருக்கு நல்ல முன்னுதாரணம் என்றால் அது மிகையல்ல.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com