ஜெயலலிதாவின் மகள் என கோரிய வழக்கில் அரசுக்கு அவகாசம்!

ஜெயலலிதாவின் மகள் என கோரிய வழக்கில் அரசுக்கு அவகாசம்!
ஜெயலலிதாவின் மகள் என கோரிய வழக்கில் அரசுக்கு அவகாசம்!
Published on

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் அம்ருதா தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பிற்கு கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரியது தொடர்பான வழக்கு இன்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அம்ருதா என்பவர் யார் என்றும், அவர் எதற்காக வழக்கு தொடர்ந்தார் என்ற தகவல்களைச் சேகரித்து வருவதாகவும் கூறினார். அதன் அடிப்படையில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனவும் கோரினார். 

‌இந்த வழக்கில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜோசப் இணைவதற்கு அம்ருதா தரப்பில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் இணைய மனு அளித்தீர்கள் என ஜோசப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து வரும் பிப்ரவரி 3ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் அதற்கு ஏதுவாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, தீபா, தீபக் ஆகியோர் ஜனவரி 25ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்து, அவற்றின் நகலை அம்ருதா தரப்புக்கு பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com