லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துக்குக் காரணம் சேமிப்புக் கிடங்குகளில் சேமித்துவைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் எனக் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து உலகம முழுவதும் அந்த வேதிப்பொருள் பற்றிய எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இந்த நிலையில், சென்னை மணலி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது அதை அப்புறப்படுத்தும் பணி இன்று முதல் தொடங்குவதாகவும்,
முதற்கட்டமாக பத்து கண்டெய்னர்களை ஹைதராபாத்தில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு கொண்டுசெல்லும் பணி நடைபெற உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மூன்று நாட்களில் 10 கண்டெய்னர்களையும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து மூலம் கொண்டு செல்லப்பட உள்ளதால் அதற்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்யவுள்ளனர்.