தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று கோரமண்டல் ஆலை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர்.
தீர்மானத்தின் மீது பேசிய உறுப்பினர்கள், ஆலையில் இருந்து வெளியேறிய அமோனியா வாயுவால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளதாவும், எனவே ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த சுற்றுச்சுழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ”ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிவினை கண்டறிந்தவுடன் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு 20 நிமிடங்களில் குழாயில் ஏற்பட்ட வாயுக் கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டது. வாயுக் கசிவு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளது.
அந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்வரை ஆலை இயங்க அனுமதிக்கப்படாது. மேலும் ஆலை நிர்வாகத்திடம் இருந்து 5 கோடியே 93 லட்சம் இழப்பீட்டு தொகை வசூலிக்க விளக்கம் கேட்டு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.