அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Published on

மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், திமுக தங்கள் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று மாலை திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படவுள்ளது. அதிமுகவுக் தங்கள் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் ஒதுக்கீட்டை இன்று காலை 10.30 மணியளவில் அறிவிக்கவுள்ளது. இந்நிலையில் அமமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 24 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூர் (தனி) - பொன்.ராஜா, தென் சென்னை - இசக்கி சுப்பையா, திருபெரும்புதூர் - தாம்பரம் நாராயணன், காஞ்சிபுரம் (தனி) - முனுசாமி, விழுப்புரம் (தனி) - வானூர் கணபதி, சேலம் - வீரபாண்டி செல்வம், நாமக்கல் - சாமிநாதன், ஈரோடு - செந்தில்குமார், திருப்பூர் - செல்வம், நீலகிரி (தனி) - ராமசாமி, கோயம்பத்தூர் - அப்பாதுரை, பொள்ளாச்சி - முத்துக்குமார், கரூர் - தங்கவேல், திருச்சி - சாருபாலா தொண்டைமான், பெரம்பலூர் - ராஜசேகரன், - சிதம்பரம் (தனி) - இளவரசன், மயிலாடுதுறை - செந்தமிழன், நாகப்பட்டினம் - செங்கொடி, தஞ்சாவூர் - முருகேசன், சிவகங்கை - தேர்போகி பாண்டி, மதுரை - டேவிட் அண்ணாதுரை, ராமநாதபுரம் - ஆனந்த், தென்காசி (தனி) - பொன்னுத்தாய், திருநெல்வேலி - ஞான அருள்மணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இதுமட்டுமின்றி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் முதற்கட்டமாக 9 பேர் கொண்ட பட்டியலையும் அமமுக சார்பில் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அதில், பூந்தமல்லி (தனி) - ஏழுமலை, பெரம்பூர் - வெற்றிவேல், திருப்போரூர் - கோதண்டபாணி, குடியாத்தம் - ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் - பாலசுப்புரமணி, அரூர் - முருகன், மானமதுரை - மாரியப்பன் கென்னடி, சாத்தூர் - சுப்பிரமணியன், பரமக்குடி - முத்தையா ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com