48 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலுக்கு வந்த அம்மன் சிலை !

48 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலுக்கு வந்த அம்மன் சிலை !
48 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலுக்கு வந்த அம்மன் சிலை !
Published on

48 ஆண்டுகளுக்குப்பிறகு பல திருப்பங்கள், சர்ச்சைகளுக்கு மத்தியில் அம்மன் சிலை கோவில் வந்து சேர்ந்தது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீதிமன்ற உத்தரவுப்படி, 48 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலில் இருந்த சாமி சிலை எதிர்தரப்பினருக்கு ஒப்படைக்க எடுத்துச்செல்லப்பட்டதால் பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கோவிந்தப்பாடி பகுதியில் 600 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கொல்லப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்களும், கோவிந்தபாடி கிராமத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து திருவிழா நடத்தி வந்தனர். 

இந்நிலையில் 48 ஆண்டுகளுக்கு முன் கோவில் தர்மகர்த்தா இறந்துவிடவே, புதிய தர்மகர்த்தா நியமிப்பதில் இருகிராமத்தினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. 48 ஆண்டுகளாக இந்தப் பிரச்னை நீடித்துவரும் நிலையில், சில வாரங்களுக்கு முன் இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், சிலையை கோவிந்தபாடி கிராமத்தை சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்,

கோவில் பூஜையை கொல்லப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதன்படி சிலையை ஒப்படைக் கூறியதால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. சாமி சாலையை எடுத்துச்சென்ற போது பெண்கள் கதறி அழுதனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com