ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் 'அம்மா உணவகம் காப்போம்' ஹேஷ்டேக்

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் 'அம்மா உணவகம் காப்போம்' ஹேஷ்டேக்
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் 'அம்மா உணவகம் காப்போம்' ஹேஷ்டேக்
Published on

சென்னையில் அம்மா உணவகம் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ட்விட்டரில் #அம்மா உணவகம் காப்போம் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சென்னை முகப்பேர் 10-வது பிளாக்கில் உள்ள அம்மா உணவகத்திற்குள் இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த அம்மா உணவக பெயர் பலகைகள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் உள்ளிட்டவற்றை கிழித்து வீதியில் எறிந்தனர். அத்துடன் உணவகத்தில் இருந்து உணவுப் பொருட்களையும் சேதப்படுத்தினர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது பின்னர் தெரியவந்தது.

இதனைக்கண்டு, அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பெண் ஊழியர்கள் வெளியே ஓடி வந்தனர். தகவல் அறிந்து ஜெ.ஜெ.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை கண்டிக்கும் விதமாக அம்மா உணவகத்தின் பெயர் பலகையை எடுத்தவர்கள் மீது மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கழகத்தில் இருந்த உடனடியாக நீக்க உத்தரவிட்டார்.

இது தொடர்பான பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ “மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழகத் தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தச்சம்பத்தை தொடர்ந்து தற்போது ட்விட்டரில் #அம்மா உணவகம் காப்போம் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த ஹேஷ்டேக்கிற்கு கீழ் ட்விட்டர் வாசிகள் பலர் அம்மா உணவகத்தின் உணவு விலை பட்டியலையும், ஜெயலிலதாவின் புகைப்படத்தையும், உணவகத்திற்கு முன்பு காத்திருக்கும் மக்களின் புகைப்படத்தையும் பதிவிட்டு பலதரப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com