பிரஸ்ஸுக்கு அண்ணாமலையின் ‘நோ, நோ’; தமிழிசைக்கு அமித் ஷாவின் ‘நோ, நோ’; என்ன நடக்கிறது பாஜகவில்?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மேடையிலேயே, முன்னாள் கவர்னர் தமிழிசைக்கு அறிவுரை வழங்கியதைப் போல வீடியோக் காட்சிகள் வெளியாகி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
தமிழிசை, அண்ணாமலை
தமிழிசை, அண்ணாமலைpt web
Published on

தமிழிசை vs அண்ணாமலை

ஆந்திர முதல்வராக நான்காவது முறையாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான விழாவில் இன்று பதவியேற்றுக்கொண்டார். அந்த நிகழ்வில் தேசிய அளவில் பல அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் பங்கேற்றனர்.

குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் என பாஜகவின் முன்னணித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.. அங்கே, உள்துறை அமைச்சர் அமித்ஷா மேடையிலேயே, முன்னாள் கவர்னர் தமிழிசைக்கு அறிவுரை வழங்கியதைப் போல வீடியோக் காட்சிகளும் வெளியாகி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

ஏற்கெனவே, தமிழக பாஜகவில் தலைவர் அண்ணாமலைக்கும் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையில் வெடித்திருக்கும் கருத்து மோதலுக்கான எதிர்வினைதான், அமித்ஷாவின் இந்த ரியாக்‌ஷன் என்கிறார்கள் விபரம் அறிந்த கட்சி நிர்வாகிகள்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி முறிவு குறித்த கருத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் முன்னாள் கவர்னர் தமிழிசைக்கும் இடையே முட்டல் மோதல் உண்டானது.

தமிழிசைக்கு ஆதரவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் சீனியர்கள் சிலர் களமிறங்க, அண்ணாமலைக்கு ஆதரவாக இளம் பாஜக நிர்வாகிகள் களம் இறங்கினர். சமூக வலைதளங்களில் ஒருவரை, ஒருவர் வார்த்தைகளால் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இந்தநிலையில், சமூக விரோதிகள் பலருக்கு தற்போது பாஜகவில் பொறுப்புகள் அதிகமாக வழங்கியிருப்பதாக தமிழிசை கருத்துத் தெரிவிக்க, அவர் மீதான அண்ணாமலை ஆதரவாளர்களின் அட்டாக் இன்னும் அதிகமானது. இந்த விவகாரங்கள் டெல்லி பாஜக தலைமைக்கும் எட்டியது.

தமிழிசை, அண்ணாமலை
சுயேட்சை வேட்பாளர் டு முதல் பெண் துணைமுதல்வர்| ஒடிசாவில் சாதித்த வழக்கறிஞர்.. யார் இந்த பிரவதி பரிதா

அமித்ஷா சொன்னதுதான் என்ன?

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவை இந்த விவகாரம் குறித்து அறிக்கை தயாரித்து தலைமைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில்தான், இன்று சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பின்போது, வெளிப்படையாகவே அமித்ஷா, தமிழிசையைக் கண்டிக்கும் விதத்தில் வீடியோக்கள் வெளியானது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்புதிய தலைமுறை

இதுகுறித்து, கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, “பத்திரிகையாளர் சந்திப்பு, பொது இடங்களில் எல்லாம் கட்சி குறித்து, தலைமை குறித்து எதிர்மறையாக கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம். அது தவறு” என அமித் ஷா கண்டித்ததாகவும், “இல்லை, அவர்கள்தான் முதலில் என்னைப் பற்றி அவதூறாக எழுதினார்கள், அதனால்தான்...” என தமிழிசை விளக்கம் கொடுக்க முயன்றபோதே, “நோ, நோ,, இது தவறு” என அமித் ஷா கண்டித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழிசை, அண்ணாமலை
தற்கொலை முயற்சி டூ ஆந்திராவின் துணை முதல்வர் வரை: பவன் கடந்து வந்த பாதை

அண்ணாமலைக்கும் டோஸ்

தமிழிசைக்கு மட்டுமல்ல, பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், “இனி தேவையில்லாமல் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசக்கூடாது. குறிப்பாக எந்த இடத்தில் மைக்கை நீட்டினாலும் பேசாமல், கட்சி அலுவலகத்தில்தான் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவேண்டும்” என டெல்லியிலேயே அறிவுரை வழங்கியே அனுப்பியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனாலேயே, இன்று டெல்லியிலிருந்து கோவை வந்த அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்ட, “இனி என் வாழ்வில் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டேன், நான் மட்டுமல்ல பாஜகவில் யாரும் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டார்கள். செய்தியாளர்கள் சந்திப்பு எல்லாம் முறையாக கட்சி அலுவலகத்தில் தான் நடைபெற வேண்டும். மேலும், செய்தியாளர் சந்திப்பு குறித்து மாவட்ட பா.ஜ.க தலைவர் முறையாக தகவலை செய்தியாளர்களுக்கு தருவார்” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார் அண்ணாமலை. அதற்குக் காரணம் டெல்லியில் தலைமை விட்ட டோஸ்தான் என்கிறார்கள் விபரம் அறிந்த கட்சி நிர்வாகிகள்.

தமிழிசை, அண்ணாமலை
ராய் பரேலியைத் தக்க வைக்கிறாரா ராகுல்? அப்போ வயநாடு? ட்விஸ்ட் வைத்த கேரள காங்கிரஸ் தலைவர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com