கொடிகம்பம் நடும் விவகாரம் - அமர் பிரசாத் ஜாமீன் தள்ளுபடி

இந்த நிலையில் பாஜக-வினருக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் ஜேசிபி கண்ணாடி ஆகியவற்றை பாஜகவினர் அடித்து உடைத்தனர்.
அமர்பிரசாத் ரெட்டி
அமர்பிரசாத் ரெட்டிPT
Published on

சென்னை பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. அந்த வீட்டின் வெளியில் கடந்த அக்டோபர் மாதம் சுமார் 50 அடி உயரம் கொடிக்கம்பம் நடுவதற்கு பாஜக தொண்டர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி நள்ளிரவு பாஜகவினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக “அந்த இடத்தில் கொடிக்கம்பம் நடக்கூடாது” என போலீசார் தெரிவித்தனர்.

அண்ணாமலை - கொடிக்கம்பம் பிரச்னை
அண்ணாமலை - கொடிக்கம்பம் பிரச்னைpt web

இதையடுத்து பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் ஜேசிபி கண்ணாடி ஆகியவற்றை பாஜகவினர் அடித்து உடைத்தனர்.

அமர்பிரசாத் ரெட்டி
அண்ணாமலை வீட்டின் முன்பு அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்றம்-வாக்குவாதம்.. கைது .. பனையூரில் பரபரப்பு

இது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி, கன்னியப்பன் (37), பாலகுமார் (35), ரமேஷ் சிவா (33), பாலவினோத் குமார் (34) ஆகியோர் உட்பட மொத்தம் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 6 பேரும் கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு அமரப் பிரசாத் ரெட்டி உட்பட அனைவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அனைவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

அமர்பிரசாத் ரெட்டி
அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com