தங்கள் வாழ்க்கை முன்னேற வழிகாட்டிய ஆசிரியைக்கு கவுரவம் செய்த முன்னாள் மாணவர்கள்

தங்கள் வாழ்க்கை முன்னேற வழிகாட்டிய ஆசிரியைக்கு கவுரவம் செய்த முன்னாள் மாணவர்கள்
தங்கள் வாழ்க்கை முன்னேற வழிகாட்டிய ஆசிரியைக்கு கவுரவம் செய்த முன்னாள் மாணவர்கள்
Published on

திருவேற்காடு அருகே தங்கள் வாழ்க்கை முன்னேற வழிகாட்டியாக இருந்த முன்னாள் ஆசிரியையை தேடிக் கண்டுபிடித்து, குடியரசு தினவிழாவில் முன்னாள் மாணவர்கள் பங்குபெற செய்தனர்.


72-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சற்று வித்தியாசமாக குடியரசு தினவிழாவை கொண்டாடினார்கள். 1994-ஆம் ஆண்டு இப்பள்ளியில் படித்த மாணவர்கள், இவர்களுக்கு பாடம் எடுத்த பள்ளி ஆசிரியையை நட்பு வட்டாரத்தின் மூலம் தேடிக் கண்டுபிடித்து தாங்கள் பயின்ற பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தனர்.


பலத்த கரவொலியுடன் அவர்களை மேடைக்கு அழைத்து வந்து சால்வை அணிவித்து கவுரவித்தனர். மேலும் முன்னாள் மாணவர்கள் தங்களின் சார்பில் இரண்டு பீரோக்களை முன்னாள் ஆசிரியர் மூலமாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்கள். தாங்கள் வாழ்க்கை முன்னேற பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம் என்பதை தற்போதைய மாணவர்கள் உணர வேண்டும் என்பதற்காக இதனை செய்ததாகவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com