”செக் பண்ணிக்கோங்க” - திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு?; திண்டுக்கல் நெய் நிறுவனம் விளக்கம்

திருப்பதி தேவஸ்தானம் எங்கள் நெய்யை ஆய்வு செய்ததில் எந்த ஒரு குறைபாடும் இல்லை என்று தெரிவித்துள்ளது –என ஏ.ஆர்.புட் பேக்டரி தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி லட்டு
திருப்பதி லட்டுpt desk
Published on

செய்தியாளர்: காளிராஜ்.த்

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு நெய்யுடன் கலக்கப்பட்டிருப்பதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்து இருந்த நிலையில், இந்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பா?
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பா? pt desk

இந்நிலையில், லட்டு தயாரிக்க திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்கிய திண்டுக்கல் 'திண்டுக்கல் ஏஆர்’ நிர்வாகத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், ”திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பியது ஜூன் ஜூலை என இரண்டு பாகங்கள் தொடர்ச்சியாக அனுப்பியுள்ளோம். தற்போது அங்கு நெய் அனுப்புவது கிடையாது. தற்போது எங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ஒரு செய்தி வருகிறது.

திருப்பதி லட்டு
ஒரே நாடு ஒரே தேர்தல் | Bun, Butter சர்ச்சையை மேற்கோள்காட்டி MLA வானதிக்கு, MP சு.வெங்கடேசன் பதிலடி!

எங்கள் நிறுவனத்தின் மீது தொடரப்படும் குற்றங்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக எங்களது நிறுவனத்தின் பொருள்களை சோதனை செய்து கொள்ளலாம். கடந்த 25 வருடத்திற்கு மேல் இந்த துறையில் இருந்து வருகிறோம். இந்த மாதிரி எங்களது பொருட்களின் தரத்தை இப்படி வெளிப்படுத்தியது கிடையாது. இது எங்களின் விளக்கம் எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பியுள்ளோம்.

Ghee factory
Ghee factorypt desk

எங்களது பொருட்கள் பல இடங்களில் விற்பனைக்காக உள்ளது. அங்கு சென்று எங்களது பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம். எங்களது ஆய்வுக கூடத்தின் அறிக்கை எங்களிடம் உள்ளது. மேலும், திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் பொழுதும் தர கட்டுப்பாட்டு துறை மூலம் ஆய்வு செய்துள்ளோம். அதில் எங்களது ஆய்வு அறிக்கையையும் அனுப்பியுள்ளோம். லட்டு தயாரிப்புக்காகவே நெய் அனுப்பப்பட்டது. அங்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பிய பல பேர் உள்ளனர். அதில் நாங்களும் ஒருவர். நாங்கள் அனுப்பியது 0.1 சதவீதம் கூட கிடையாது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் முன்பும் நெய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கூறிய பின்பும் தற்போது மீண்டும் பரிசோதனை செய்துள்ளோம். தர ரீதியாக எங்களிடம் சரியான ஆதாரம் உள்ளது. அவர்களிடமிருந்து எங்களுக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை ஆனால் எங்கள் தரப்பில் இருந்து அனைத்து ஆய்வறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டு
திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன் மோகன் Vs சந்திரபாபு நாயுடு.. நடப்பது உணவு கலப்படமா, அரசியல் ஆதாயமா?
திருப்பதி லட்டு விவகாரம்
திருப்பதி லட்டு விவகாரம்முகநூல்

திருப்பதி தேவஸ்தானத்தில் ஆய்வு செய்ததில் எந்த ஒரு குறைகள் இல்லை என்றே வந்துள்ளது. எங்களிடம் ஆய்வுக்கான அறிக்கைகளும் திருப்பதி தேவஸ்தானத்தின் ஆய்வறிக்கையும் உள்ளன. உணவு பாதுகாப்புத் துறை மற்றும் ஐஎஸ்ஐ அக்மார்க் ஆகியோர் எங்களிடமிருந்து சாம்பிள் எடுத்து சென்றுள்ளனர். அதில் இதுவரை எந்த ஒரு குறைகளும் இல்லை” என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com