பெரம்பலூர் - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள க.எறையூர் கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரிகளால் உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி அக்கிராமத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 40 குவாரிகளில் 31 குவாரிகளுக்கு ஏலம் விடும் பணி நாளை தொடங்கபட உள்ள நிலையில், க.எறையூர் கிராமத்தில் இயங்கிவரும் 7 குவாரிகளுக்கான ஏலத்தை நிறுத்த வேண்டுமென கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
"குவாரிகளில் இருந்து வெளியேறும் லாரிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஜல்லிகளை ஏற்றிச் செல்கின்றன. லாரிகள் கட்டுக்கடங்காமல் இயங்கிவருகிறது. அடிக்கடி வாகன விபத்தில் கிராமத்தினர் உயிரிழக்கின்றனர். பள்ளிவிட்டு மாலை வீடு திரும்பும் பிள்ளைகளை அவ்வழியாக அழைத்து வருவதே அச்சமாக உள்ளது” என அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதுதொடர்பாக ஆட்சியரிடத்தில் கிராமத்தினர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவை வாங்கி குறையை கேட்ட ஆட்சியர், அங்குள்ள சாலைககள் மற்றபிற வசதிகளை ஆய்வு செய்ய இருப்பதாகவும் ஏலம் நிறுத்தம் செய்வது தொடர்பான ஆய்வுக்கு பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் கிராமத்தினரிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கிராமத்தினர் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மகேந்திரன் (போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர்) , ரமேஷ் IT wing, சிவசங்கர் பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், அன்பழகன் ஒகளூர் தலைவர், ஆறுமுகம் பெண்ணகோனம் தலைவர், மதியழகன், கோபி, செல்வம், விஜயகாந்த், தர்மா ஆகியோர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாமளா தேவி உத்தரவின் பெயரில் வழக்கு எண் (147, 148, 294B ,323 ,353 ,506 class 2 IPL, Red With 3 of PPDL ACT) ஆகிய வழக்குகள் பதியப்பட்டுள்ளது.