எதற்கெல்லாம் தடை தொடரும் - தமிழக அரசின் அறிவிப்பு சொல்வதென்ன?

எதற்கெல்லாம் தடை தொடரும் - தமிழக அரசின் அறிவிப்பு சொல்வதென்ன?
எதற்கெல்லாம் தடை தொடரும் - தமிழக அரசின் அறிவிப்பு சொல்வதென்ன?
Published on

தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் எதற்கெல்லாம் தடை தொடரும் என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை பார்க்கலாம்.

நகர்ப்புற வழிபாட்டு தளங்களிலும், பெரிய வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய தடை தொடரும்.

அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. 

நீலகிரி மாவட்டத்திற்கும் கொடைக்கானல் ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும் மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பயணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. 

வணிக வளாகங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. பள்ளிகள் கல்லூரிகள் ஆராய்ச்சி நிறுவனங்கள் பயிற்சி கூடங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. எனினும் இந்நிறுவனங்கள் ஆன்லைன் கல்வி முறையை தொடர்ந்தால் ஊக்குவிக்கலாம். 

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது. மெட்ரோ ரயில் மின்சார ரயில்களுக்கு தடை தொடர்கிறது. 

தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், சுற்றுலா தளங்கள், கடற்கரை, கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றுக்கு தடை தொடர்கிறது. அனைத்து வகையான ஊர்வலங்களுக்கும் மாநிலங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்து கழகம் தடை விதிக்கப்படுகிறது. 

மேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கு ஏற்றவாறு படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com