கோயம்பேடு மார்க்கெட் மற்றும் மாவட்டங்களில் உள்ள சந்தைகளை திறக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருமழிசையில் உள்ள தற்காலிக சந்தையில் போதுமான இட வசதிகள் இல்லை என வியாபாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், கோயம்பேடு மார்க்கெட் மற்றும் மாவட்டங்களில் உள்ள சந்தைகளை திறக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட்டுகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்ப்பின் விக்கிரமராஜா கூறுகையில், அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். சந்தைகள் திறக்கப்பட்டால் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிப்போம் எனவும் தெரிவித்தார்.