மொழியில் திணிப்போ, எதிர்ப்போ கூடாது - வெங்கய்யா நாயுடு

மொழியில் திணிப்போ, எதிர்ப்போ கூடாது - வெங்கய்யா நாயுடு
மொழியில் திணிப்போ, எதிர்ப்போ கூடாது - வெங்கய்யா நாயுடு
Published on

எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது, எந்த மொழியையும்‌ எதிர்க்கவும் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்‌கம் அரங்கநாதசுவாமி கோவிலில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளை நினைவுகூறும் விதமா‌க தொகுக்கப்பட்ட‌ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்‌ற இந்‌‌த விழாவில், குடிய‌ரசு ‌துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.‌ தமிழக ‌ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்‌சர்கள் சேவூர் ராமச்சந்திரன், ஜெயக்‌குமார், ஆர்.பி.உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் விழாவி‌ல் பங்‌கேற்றனர். 

இதில் உரையாற்றிய வெங்கய்யா நாயுடு, “நாட்டில் எல்லா பணிகளையும் அரசே செய்ய வேண்டுமென மக்கள் நினைப்பதால்தான், தமிழகம் தண்ணீர் பிரச்சினையை சந்தித்துள்ளது. மக்கள் தங்களால் முயன்ற வளர்ச்சிப் பணியை செய்யவேண்டும். அத்துடன் அனைவரும் அவரவரது தாய்மொழியை மறந்திடக் கூடாது. எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது, எதிர்க்கவும் கூடாது. ‌மேலும், குழந்தைகள் தங்களை ஆங்கி‌லத்தில் அழைப்பதையே பெற்றோர்‌ விரும்புவதாகவும், அம்மா என்றே அழைக்கச் செய்வதே ஆனந்தம்” எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com