”இந்துகளை அவதூறாக பேசி விட்டு திமுக எம்.பி. ஆ.ராசா ரோட்டில் நடமாடுகிறார்” - கடம்பூர் ராஜு

”இந்துகளை அவதூறாக பேசி விட்டு திமுக எம்.பி. ஆ.ராசா ரோட்டில் நடமாடுகிறார்” - கடம்பூர் ராஜு
”இந்துகளை அவதூறாக பேசி விட்டு திமுக எம்.பி. ஆ.ராசா ரோட்டில் நடமாடுகிறார்” - கடம்பூர் ராஜு
Published on

இந்துக்களை இழிவாக பேசிய ஆ.ராசாவை நாட்டில் நடமாடவிட்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் கூட்டம் நம்ம கூட்டம் தான் என்று ஆவேசமாய் கூறியுள்ளார் கடம்பூர்.செ.ராஜூ.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சார கட்டணத்தினை உயர்த்திய தமிழக அரசினை கண்டித்தும், கட்டணத்தினை திரும்ப பெற வலியுறுத்தியும் பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மெழுகுவார்த்தி ஏந்தி மின்சார கட்டண உயர்வினை கண்டித்து கோஷங்களை எழுப்பினார். சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து கடம்பூர்.செ.ராஜூ பேசுகையில், ”திமுகவிற்கு தெம்பும் திராணியும் இருந்தால் ஆட்சியை கலைத்து விட்டு 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கட்டும், அப்படி நடந்தால் எதிர்கட்சியாக கூட வரமுடியாது. நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பூஜ்யம் தான் கிடைக்கும், திமுக அரசுக்கு மக்கள் தரப்போகும் பரிசு பூஜ்யம் தான், காலை உணவுதிட்டம் அதிமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதி, அதை தான் திமுக அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது.

திமுக ஆட்சி என்பது மின்சாரத்தை விட மோசம், சூரியன் நம்மை வதைக்கதான் செய்யும், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து மக்களை காப்பாற்றும் பொறுப்பு அதிமுகவிற்கு உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் விரைவில் வசந்தகாலம் தான். அதிமுக கட்சி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பினை பார்த்து ஓ.பி.எஸ்-ஐ விட ஏமாந்து நிலைகுலைந்து போனது திமுக தான். அதனால் தான் அமைச்சர்கள் வீடுகளில் திமுக அரசு ரெய்டு நடத்தியுள்ளது. ஒரு அமைச்சர் வீட்டில் எத்தனை முறை தான் ரெய்டு செய்வார்கள் என்று தெரியவில்லை. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் நிச்சயம் அழிந்து போவார்கள்.

ஒரு வகையில் நாம் எல்லோரும் மனங்கெட்டவர்கள் தான், திமுக எம்.பி. ஆ.ராசா இந்துகளை அவதூறாக பேசி விட்டு, இந்த நாட்டில் ரோட்டில் நடமாடிக் கொண்டு இருக்கிறார். அதனை வேடிக்கை பார்க்கும் கூட்டம் நம்ம கூட்டம் தான், தமிழர்கள் ஏமாந்துபோனவர்கள் என்று திமுக நினைத்து கொண்டு இருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் திமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com