”அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் இந்தியாவெங்கும் நிகழவேண்டும்" : கமல்ஹாசன்

”அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் இந்தியாவெங்கும் நிகழவேண்டும்" : கமல்ஹாசன்
”அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் இந்தியாவெங்கும் நிகழவேண்டும்" : கமல்ஹாசன்
Published on

”அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் இந்தியாவெங்கும் நிகழவேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுகள்” என்று பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேரை அர்ச்சகர்களாக நியமனம் செய்து அதற்கான ஆணையை சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அவர்களில் 6 பேர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த, அறிவிப்புக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்துவரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம்.

கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்” என்று பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/1427976235024457738?ref_src=twsrc%5Etfw">August 18, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com