யார் இந்த அன்னியூர் சிவா?.. அடிமட்ட தொண்டன் To எம்.எல்.ஏ! 37 ஆண்டுகால பயணத்திற்கு கிடைத்த வெற்றி!

இந்நிலையில் விக்கிரவாண்டியில் வெற்றி முகமாக இருக்கும் அன்னியூர் சிவாவின் கடந்த கால வாழ்க்கையை, திமுகவின் அவரது பயணத்தை சற்றே திரும்பிப்பார்க்க முயல்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.
அன்னியூர் சிவா
அன்னியூர் சிவாபுதியதலைமுறை
Published on

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன. திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அன்னியூர் சிவா கிட்டதட்ட 1,23,000 வாக்குகளுக்கு மேல் பெற்று 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியிருக்கிறார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56 ஆயிரம் வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாதக வேட்பாளர் அபிநயாவும் சுமார் 10 ஆயிரம் வாக்குகளையே பெற்று பின்னடைவையே சந்தித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடியின் நன்மதிப்பை பெற்று முதல்வரால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்னியூர் சிவா, அவரது 30 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் பயணத்தில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். தொடர் வெற்றிகளை குவித்திருந்த காங்கிரஸை வீழ்த்தி 1967ம் ஆண்டு திமுக வென்ற பிறகு, 2வது முறையாக கருணாநிதி தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஆண்டில் அன்னியூர் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் அரசு ஊழியருக்கு மகனாக பிறந்தவர்தான் அன்னியூர் சிவா. சிறுவயதில் இருந்தே முன்னாள் முதல்வர் கருணாநிதியால் ஈர்க்கப்பட்ட அன்னியூர் சிவா, தனது 16வது வயதில் திமுகவில் இணைந்தார்.

அன்னியூர் சிவா
மந்தகதியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை | திமுக வேட்பாளர் 15,000 வாக்குகள் முன்னிலை!

சிறு வயதிலேயே 1984 ஆண்டில் மைக்கைப் பிடித்துக்கொண்டு திமுகவினருக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்டு ஜீப்பில் பயணித்த அன்னியூர் சிவாவுக்கு, இப்போதைய திமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் களத்தில் இறங்கி பரப்புரை செய்கின்றனர். பி.ஏ வரலாறு படித்த இவர், 1988ல் தபால் நிலையங்களில் இந்தியில் எழுதப்பட்டதை அழித்து, எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்று வந்துள்ளார்.

போராட்டம், சிறைவாசத்திற்கு பிறகு 1999ம் ஆண்டு முதன்முறையாக கட்சிப்பொறுப்பு அன்னியூர் சிவாவைத் தேடி வந்தது. ஆம், அந்த ஆண்டு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டவர், 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2003ல் விழுப்புரத்தில் ஒன்றுபட்ட மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆனார்.

அன்னியூர் சிவா
மந்தகதியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை | திமுக வேட்பாளர் 15,000 வாக்குகள் முன்னிலை!

தனது பகுதிக்குட்பட்ட தேர்தல் பணிகளை தொய்வின்றி செய்துவந்த அன்னியூர் சிவா 2020ம் ஆண்டில் தலைமைக் கழக விவசாய அணித் துணைச் செயலாளராக மாறினார். அதுதொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு முதல் மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளராக இருந்து வரும் இவர், தனது 37 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எந்த ஒரு தேர்தலில் போட்டியிட்டதில்லை. கவுன்சிலர், ஊராட்சி மன்றத்தலைவராகக் கூட போட்டியிடவில்லை எனினும், தனது பகுதியில் கட்சி சார்பாக எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் தவறாமல் கலந்துகொண்டுள்ளார். மேலும், இளைய தலைமுறையினரோடு சகஜமாக பழகக்கூடியவராகவும் இருந்த இவர் நல்ல செல்வாக்கையும் பெற்றவராக இருந்து வருகிறார்.

அன்னியூர் சிவா அடிமட்ட தொண்டனில் தொடங்கி 3 தசாப்தங்களை கடந்த பின்னர் நேரடியாக சட்டமன்ற உறுப்பினர் என்ற இடத்தை எட்டிப்பிடித்திருக்கும் நேரத்தில் அவரது வெற்றி நிலவரத்தை கொண்டாடி தீர்க்கிறது ஒட்டுமொத்த திமுக தொண்டர் பட்டாளம். திமுகவின் தொடர் வெற்றிப்பயணத்தால் திமுகவினரும் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

அன்னியூர் சிவா
விறுவிறுப்பாக நடைபெறும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com