“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுதான்; இருந்தாலும்..” – மது குடிப்போரின் மழுப்பல் பதில்கள்! #Video
டாஸ்மாக் கடைகளுக்கு மது குடிக்க வருபவர்களிடம், மதுவின் தீமைகள் பற்றியும் ஏன் இன்னும் இந்த மதுவுக்கு அடிமையாக நீடிக்கிறீர்கள் என்பது குறித்தும் புதிய தலைமுறை சார்பில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் கூறிய பதில்களை பார்க்கலாம்...
நபர் 1
“ஒரு மாசம் நிப்பாட்டிப் பாத்தேன்.. ஆனாலும்...”
“இதை நிப்பாட்டினோம்னா கை காலெல்லாம் வெட வெடங்குது. இது இல்லாம என்னால இருக்க முடியல. ஒரு மாசம் நிப்பாட்டிப் பாத்தேன்... தஞ்சாவூர்ல ட்ரீட்மெண்ட்கூட எடுத்தேன். ஆனாலும் முடியல”
நபர் 2
“Very Bad, I know... Couldn't Control”
“காலைல 250 ரூபா கொடுத்து பிளாக்ல குடுச்சேங்க. 250, 200, 100, இப்ப குடிக்கப்போறது 350 ரூபா...” என்றவரிடம், ‘குடியை நிப்பாட்ட முடியலயா’ என்று கேட்டதற்கு.. Very Bad, I know... Couldn't Control, இது எடுக்கலனா, சாப்பாடு இறங்குறதில்ல”
நபர் 3
“ஒயின் ஷாப்ப ஒழிச்சாதான் நாங்க நல்லா இருக்க முடியும்”
“குடிக்கிறத தவிர்க்க முடியல சார். அதுல இருந்து மீண்டு வர முடியல. இந்த ஒயின் ஷாப்ப ஒழுச்சாதான் நாங்க நல்லா இருக்க முடியும். குடி குடின்னு குடிச்சுட்டு இருந்தோம்னா பொண்டாட்டி பிள்ளைய இழந்துட்டு போக வேண்டியதுதான்”
இப்படி இன்னும் பல குடிகாரர்கள், மது அருந்துவோர் தங்களின் கருத்துகளை புதிய தலைமுறையில் தெரிவித்தனர். அவற்றை கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
போதைப்பழக்கத்துக்கு அடிமையானோர், முறையாக தமிழ்நாடு அரசின் போதை மறுவாழ்வு மையத்தில் சேரவும். ஒருவேளை போதைப்பழக்கத்தை தடுக்க உரிய சிகிச்சை எடுக்கவில்லையென்றால் உடல்நிலை, மனநிலை, குடும்ப சூழல் என அனைத்தும் பாதிக்கப்படும். மிக முக்கியமாக ஆயுள் குறையும். இவ்விஷயத்தில் போதையில் சிக்கியவரை மீட்க, குறிப்பிட்ட நபருக்கு பக்கபலமாக அவரின் குடும்பத்தினர் இருப்பது அவசியப்படுகிறது.