அலங்காநல்லூரில் பிப்ரவரி 1 ஆம் தேதி நடக்க இருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்படதாக ஜல்லிக்கட்டு விழாக்குழு தெரித்துள்ளது. முதலமைச்சரை சந்தித்தபின் ஜல்லிக்கட்டுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் எழுந்த போராட்டத்தால் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் பிப்ரவரி 1 தேதி நடக்கும் எனவும், பாலமேட்டில் பிப்ரவரி 2 ஆம் தேதி நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அலங்காநல்லூர் மற்றும் , பாலமேட்டில் நடக்கவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைகப்பட்டுள்ளது. முதலமைச்சரை சந்தித்தபின் ஜல்லிக்கட்டுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என அலங்காநல்லூர் விழாக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியை நானே தொடங்கிவைப்பேன் என முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார். அதன்படி மதுரை சென்றார் ஆனால் அங்கு மக்கள் போராட்டத்தை கைவிடாத நிலையில் சென்னை திரும்பினார்.