நூதன முறையில் தாய்க்கு இறுதிசடங்கு செய்த அகோரி

நூதன முறையில் தாய்க்கு இறுதிசடங்கு செய்த அகோரி
நூதன முறையில் தாய்க்கு இறுதிசடங்கு செய்த அகோரி
Published on

திருச்சியில் அகோரி ஒருவர் தனது தாய்க்கு விநோதமான முறையில் இறுதி அஞ்சலி செலுத்தியது அக்கிராம மக்களிடையே மிரட்சியை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம் திருவெம்பூர் அருகே இறந்த தாயின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட அகோரி ஒருவர் தனக்கே உரித்தான பாணியில் பூஜை செய்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அகோரியான மகன் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தனது தாயின் சடலத்தின் மீது ஏறி அமர்ந்துக்கொண்டு ஹரஹர மகாதேவ் என்ற கோஷத்துடன் இறுதியஞ்சலி செலுத்தினார். அவருடன் சேர்ந்து மேலும் சில அகோரிகளும் பூஜையில் கலந்து கொண்டனர். மேலும் ஒரு அகோரி தலைகீழாக நின்று தியானம் செய்தார்.

அரியமங்கலம் உய்யங்கொண்டான் ஆற்றங்கரையில் உள்ள காளி கோயிலை அகோரி பயிற்சி பெற்ற மணிகண்டன் என்பவர் நிர்வகித்து வருகிறார். அகோரியான மணிகண்டன் இறந்த தனது தாய்க்கு தங்களது முறைப்படி இறுதியஞ்சலி செலுத்தினார். விநோதமான இறுதியஞ்சலியை கண்ட அவரது உறவினர்களும், அக்கிராம மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பேசிய அகோரி மணிகண்டன், '' இந்த இறுதி அஞ்சலியில் இறந்த உயிருக்கு நாம் மோட்சம் கொடுக்கிறோம். அந்தச் சடலம் நம்முடன் பேசுகிறது. இந்த முறையில் இறுதி அஞ்சலியை வேறு யாரும் செய்யத்தயங்குவார்கள். அதனால் என் தாய்க்கு நானே செய்தேன். சடலத்தின் மீது ஏறி அமர்ந்து இறுதி அஞ்சலி செலுத்தும்போது அவருடைய பாவங்கள் அனைத்தையும் நாம் வாங்கிக்கொண்டு இறந்தவரை தூய்மையாக மேலோகத்திற்கு அனுப்பி வைக்கிறோம்” என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com