சென்னையில் வாக்கு எண்ணிக்கை : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னையில் வாக்கு எண்ணிக்கை : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னையில் வாக்கு எண்ணிக்கை : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Published on

சென்னையில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 3 மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடந்ததுள்ளது. தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்க்கும் நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 45 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் பதிவான வாக்குகளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாளை காலை 8 மணி முதல் தொடங்கும். மேலும் நாளை இந்தியா முழுவதும் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையில் விவிபாட் முக்கிய பொறுப்பு வகிக்கப்போகிறது என்றும் பலரின் வெற்றி தோல்விகளை விவிபாட் தான் கடைசியில் தீர்மானிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் லயோலா கல்லூரி ஆகிய  3 மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார். சென்னை ராணி மேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வாக்கு எண்ணிக்கையானது முழு பாதுகாப்புடன் நடைபெறும் எனவும், ஒவ்வொரு மையத்திலும் 750 போலீசாரும் மற்றும் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் 2500 மேற்பட்ட போலீசார் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே பாதுகாப்பில் இருப்பார்கள் என்றும் சென்னை முழுவதும் 5000 காவலர் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என விஸ்வநாதன் தெரிவித்தார். மேலும்,அமைதியான சூழலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com