144 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிகள் Iqrom Rifadly Fahmi Zainal, Maitryee Shrikrishna Shitole!

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (AXB613) விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது துரிதமாக செயல்பட்ட இரு விமானிகள், பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினர்.
பாதுகாப்பாக 144 பயணிகளை காப்பாற்றிய விமானிகள்
பாதுகாப்பாக 144 பயணிகளை காப்பாற்றிய விமானிகள்புதிய தலைமுறை
Published on

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (AXB613) விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் பதற்றம் ஏற்பட்டது. மாலை 5. 40 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம், 2 மணி நேரத்திற்கும் மேலாக வானிலேயே வட்டமடித்த நிலையில், 8.15 மணியளவில் தற்போது திருச்சியிலேயே பாதுகாப்பாக தரையிறங்கியது.

பாதுகாப்பாக 144 பயணிகளை காப்பாற்றிய விமானிகள்
திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கிய விமானம்..

விமானத்தில் எரிபொருள் அதிகமாக இருந்ததால், விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒருவேளை லேண்டிங் கியர் இல்லாமல் விமானம் தரையிறங்கினால் தரையில் மோதி புகை அல்லது தீ ஏற்பட்டு மிகப்பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பிருந்ததால், விமானத்தை தரையில் இறக்காமல் முடிந்தளவு எரிபொருளை குறைக்கும் முயற்சியில் விமானக்குழு ஈடுபட்டது.

நீண்டநேர பெரும் போராட்டத்திற்கு பிறகு விமானத்தில் சிக்கிய 144 பயணிகளையும், விமானி Iqrom Rifadly Fahmi Zainal மற்றும் துணை விமானி Maitryee Shrikrishna Shitole பத்திரமாக தரையிறக்கினர்.

பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்ட நிலையில், தரையுடன் மோதியதால் விமானத்தில் புகை ஏற்பட்டது. சரியான நேரத்தில் நிதானமாக செயல்பட்ட விமானி மற்றும் துணை விமானி (Iqrom Rifadly Fahmi Zainal மற்றும் Maitryee Shrikrishna Shitole) 2.30 மணி நேரத்திற்கும் மேலாக போராடி அனைவரது உயிரையும் காப்பாற்றினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com