விதியை மீறி பிரசாரம் செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.. குற்றஞ்சாட்டி புகாரளித்த அதிமுக!

விதியை மீறி பிரசாரம் செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.. குற்றஞ்சாட்டி புகாரளித்த அதிமுக!
விதியை மீறி பிரசாரம் செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.. குற்றஞ்சாட்டி புகாரளித்த அதிமுக!
Published on

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் தமிழக முதல்வர், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பேசியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென அதிமுக புகார் மனு அளித்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில், மகளிருக்கான உரிமை தொகை 1000 ரூபாய் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் பட்ஜெட்டில் வெளியிடப்படும் என அறிவித்தது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த இன்புதுரை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, “தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி இந்த அறிவிப்பை முதல்வர் அறிவித்துள்ளார். தற்பொழுது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளோம். இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் ஆணையருக்கும் புகார் மனுவை அனுப்பி உள்ளோம்.

அதிமுக சார்பாக இதுவரை 12-க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த புகாருக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருவேளை முதல்வர் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப் போகிறோம் என்று சொல்லி இருந்தேன் என குறிப்பிட்டால், அது மக்களை ஏமாற்றும் மோசடி.

தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய இந்த பேச்சு எல்லா தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பானது. ஆகவே முதல்வர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com