ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து ஜே.சி.டி.பிரபாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்தும் தனக்கே உரியது என்ற அதிபர் மனப்பான்மையில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். பொதுக்குழு என்ற பெயரில், எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை கூட்டி நிரந்தரப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஜெயலலிதாவையே நீக்கியது கொடுஞ்செயல் என்றும், இது கட்சி விதிமுறைகளுக்கு முரணாது என்றும் ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ளார்.
தன் விருப்பங்களுக்கு ஏற்ப கட்சியின் அடிப்படை சட்ட விதிகளை மாற்றுவதும், எதையும் தனது வாங்கும் சக்தியால் சாத்தியமாக்க முடியும் என ஈ.பி.எஸ். நினைப்பது வேதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈ.பி.எஸ்.சின் எண்ணத்திற்கு மனசாட்சி உள்ள அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் தக்க பதிலடி தருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.