அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல்... இன்று தெரியுமா முடிவு?

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல்... இன்று தெரியுமா முடிவு?
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல்... இன்று தெரியுமா முடிவு?
Published on

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 11) நடந்த வன்முறையை தொடர்ந்து சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதை ரத்து செய்யக் கோரியும், இந்த உத்தரவுக்கு தடை விதித்து, கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க கோரியும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த இரு மனுக்களில் பொதுக்குழுவின் போது கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என கூறி பாதுகாப்பு கோரி கட்சியின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தரப்பு, `இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும், பாதுகாப்பு வழங்கப்படவில்லை. மேலும் பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன், பன்னீர்செல்வம் தனது ஆட்களுடன் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த கோப்புகளை எடுத்துச் சென்றுள்ளார். இதுசம்பந்தமாக புகார் அளித்தும், காவல் துறையினர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிமுகவினர் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சொத்து உரிமை தொடர்பாக பிரச்னை இருந்தால் மட்டுமே சீல் வைப்பதற்கான சட்டப்பிரிவுகளை அமல்படுத்த முடியும். அதிமுக தலைமை அலுவலகத்தை பொறுத்தவரை, சொத்து உரிமை தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை. கட்சியின் தலைமை நிலைய செயலாளர், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சி அலுவலகத்தின் உரிமை எனக்கு உள்ளது. பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த போது கட்சி அலுவலகத்தை சீல் வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும், சீல் வைத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் எதிர்மனுதாரராக எடப்பாடி பழனிச்சாமியை இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், `எடப்பாடி பழனிச்சாமி, தன்னை பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டது உரிமையியல் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது. இதுநாள் வரை எந்த நீதிமன்றமும் என்னை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றோ, எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் என்றோ அறிவிக்கவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சி தலைமை அலுவலகத்துக்குள் நுழைய எனக்கு எல்லா சட்டப்பூர்வ உரிமைகளும் உள்ளதாகவும், கட்சி தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட போது அது எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தின் உரிமை தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டது என்பது தொடர்பானன எந்த ஆதாரங்களும் இல்லாமல், முறையாக விசாரணை நடத்தாமல் சீல் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியரின் அந்த உத்தரவை ரத்து செய்து அலுவலகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியுள்ளார்.

இப்படி எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ. பன்னீர்செல்வம் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதி சதீஷ்குமார் நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று (ஜூலை 14) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. வழக்கு பட்டியலில் 82 மற்றும் 83வது வழக்குகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com