அதிமுக கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம் !

அதிமுக கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம் !
அதிமுக கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம் !
Published on

அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதிமுக தலைமையகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூன்று எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் அதிருப்தி எம்.எல்.ஏக்களான ரத்தின சபாபதி, கலைச்செல்வன் மற்றும் பிரபு ஆகியோரும் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் முதல் தீர்மானத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இரண்டாவது தீர்மானத்தில் இந்தத் தேர்தல்களில் பணியாற்றிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அத்துடன் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். 

மூன்றாவது தீர்மானத்தில் பிரதமராக மோடியை வழிமொழியும் வாய்ப்பை அதிமுகாவிற்கு அளித்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது தீர்மானத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் பெற்ற வெற்றியை போல் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்தாவது தீர்மானத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com