மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் விடிய விடிய கனமழை பெய்தது. 8 மணி நேரத்திற்கும் மேலாக மழை தொடரும் நிலையில் அண்ணாநகரில் 18.3 செமீ மழையும் கோடம்பாக்கத்தில் 18.2 செமீ மழையும் பதிவாகியுள்ளது. அடையாறு சுற்றுவட்டார பகுதிகளில் 17.4 செமீ மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 20 செமீ மழையும், வளசரவாக்கத்தில் 19 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அதிமுக சார்பாக கழக தொழில்நுட்பப்பிரிவு சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்காம அவசர தொடர்பு ஒருங்கிணைப்பிற்கு உதவி எண்கள் பகுதி வாரியாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த உதவி எண்கள் மூலம், தற்காலிக பாதுகாப்பான தங்குமிடங்களை அடைவதற்கு போக்குவரத்து சம்பந்தமான தொடர்புகளை ஒருங்கிணைத்தல் மற்றும் உதவுதல், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மருத்துவ அவசர பதில்களை ஒருங்கிணைத்து முடிந்தவரை உதவிகளை வழங்குதல், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் உணவுக்கான தகவல்தொடர்புகளை எளிதாக்குதல் மற்றும் ஒருங்கிணைத்தல், விழுந்த மரங்கள், தண்ணீர் தேங்குதல், மின்சார பிரச்சனைகள் மற்றும் மெட்ரோ நீர் விநியோகம் ஆகியவற்றிற்கு மாநகராட்சி சேவை ஊழியர்களுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பு, NDMA வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பொது மக்களில் ஒருவராக குடிமக்களின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் உதவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு பேரிடர் மேனாண்மைக்கு உதவுகிற பொதுமக்களின் கட்டமைப்பாக களத்தில் அதிமுக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.