வெட்டுக்கிளிகள் தாக்குதலில் தப்பிப்பது எப்படி ? இன்று ஆலோசனை

வெட்டுக்கிளிகள் தாக்குதலில் தப்பிப்பது எப்படி ? இன்று ஆலோசனை
வெட்டுக்கிளிகள் தாக்குதலில் தப்பிப்பது எப்படி ? இன்று ஆலோசனை
Published on

நீலகிரி கிருஷ்ணகிரி ஆகிய மாவடங்களில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் காணப்படுவதாலும், வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து தமிழகத்தை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது தொடர்பாகவும் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக கேரள எல்லையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பதாகவும், பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இது குறித்து கூடலூர் - நீலகிரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை நேற்று அறிக்கை வெளியிட்டது.

அதில், தமிழக-கேரள எல்லையில் ஆய்வு மேற்கொண்டதில் வெட்டுக்கிளிகளால் எவ்வித சேதமும் இல்லை என்ற விபரம் தெரியவந்தது. இது குறித்து கேரள விவசாயத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டதில், அங்கு புல்பள்ளி பகுதியில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் ஆலர்சஸ் மில்லேரியஸ் என்னும் தாவரப் பெயர் கொண்ட புள்ளி வெட்டுக்கிளிகளே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது காப்பி லோகஸ்ட் என்னும் பொதுப்பெயரைக் கொண்டது. இது பயிர் சேதம் ஏற்படுத்தும் லோகஸ்ட் வகையை சேர்ந்தவை அல்ல. இவை இலைகளை மட்டுமே உன்பதால் பயிர் சேதம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது” எனக்கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீலகிரி கிருஷ்ணகிரி ஆகிய மாவடங்களில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் காணப்படுவதாலும், வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து தமிழகத்தை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது தொடர்பாகவும் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com