தமிழகத்திற்கு தேவையான உரங்களை உரிய நேரத்தில் முழுமையாக ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து ஒன்றிய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் தற்போது 25 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றுக்கு போதிய உரம் தேவைப்படுவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழகத்திற்கு தேவையான யூரியா, டிஏபி உரங்களை உரிய நேரத்தில் முழுமையாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இறக்குமதி செய்யப்படும் உரங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களை வந்தடைய ஏற்பாடு செய்து தருமாறும் தனது கடிதத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கோரியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: சென்னையில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து அமல் - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி