வெற்றிலை போடும் பழக்கம் குறைந்து இளைஞர்கள் சுவிட் பீடா சாப்பிடுவதை தான் விரும்புவதாக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கேள்வி நேரத்தின் பேசிய பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தேனிமாவட்டம் பெரியகுளம் பகுதியில் கருப்பு வெள்ளை வெற்றிலையை விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். இந்த வெற்றிலை மருத்துவ குணம் கொண்டதாகவும், விரியமிக்கதாவும் இருப்பதால் மருத்துவ துறை பயன்படுத்தும் விதமாக வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு முன் வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதே போல விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் உள்ள லால்பேட்டையில் வெற்றிலை அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் இங்கு ஆராய்ச்சி மையத்துடன் கூடிய தோட்டகலைக் கல்லூரி அமைக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீ்ர்செல்வம், தமிழ்நாட்டில் அங்கங்கு உற்பத்தி செய்யப்படும் வெற்றிலை ஆராய்ச்சி என்பது வேளாண் கல்லூரிகள் மூலமாக மேற்கொள்ளப்படுவதாக தெரித்தார். மேலும், கடந்த காலங்களில் பெரியகுளம், லால்பேட்டை,கும்பகோணம் வெற்றிலை எல்லாம் சிறப்பு பெற்று இருந்தாகவும், உணவு சாப்பிட்டாலே வெற்றிலை சாப்பிடுவார்கள். ஆனால் இன்றுள்ள இளைஞர்கள் வெற்றிலை போடுவதில்லையென்றும், சுவிட் பீடா சாப்பிடுவதாக தெரிவித்தார்.
இதனால் வெற்றிலை போடும் பழக்கம் குறைந்து விட்டதாக கூறினார். வெற்றிலை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாவும், இதன் மூலம் 778 விவசாயிகள் பயனடைந்துள்ளதாவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் -டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் இன்று ஆஜர்