இன்று தாக்கலாகிறது தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை!

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். இதில் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உரத்துக்கான மானியத்தை அதிகரிக்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்பது விவசாயிகளின் பொதுவான கோரிக்கையாக உள்ளது.

வேளாண் நிதிநிலை அறிக்கை
"தமிழ்ப் புதல்வன் திட்டம் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்" -அன்பில் மகேஷ் விளக்கம்!

திமுக அரசின் வாக்குறுதியின்படி, கடந்த 2021ம் ஆண்டு முதல் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் வேளாண் துறைக்கு 38,904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com