தமிழக அமைச்சரவை மாற்றம்: எந்தெந்த மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் இல்லை?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்திற்கு பின் மாவட்ட வாரியான பிரதிநிதித்துவங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எந்த மாவட்டங்களுக்கு அதிக அமைச்சர்கள்... எந்தெந்த மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் இல்லை என்பதை தற்போது காணலாம்.
தமிழக அமைச்சரவை
தமிழக அமைச்சரவைகோப்புப்படம்
Published on

தமிழக அமைச்சரவையில் அதிகபட்சமாக சென்னையிலிருந்து 4 பேர் அமைச்சர்களாக உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் அமைச்சரவையில் உள்ளனர்.

திருச்சியிலிருந்து கே.என்.நேரு, அன்பில் மகேஸ், கடலூரிலிருந்து எம்ஆர்கே பன்னீர்செல்வம், சி.வி.கணேசன், திருப்பூரில் இருந்து மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், திண்டுக்கல்லிலிருந்து ஐ.பெரியசாமி, சக்கரபாணி என தலா 2 அமைச்சர்கள் உள்ளனர்.

புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள்
புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள்

மதுரையிலிருந்து பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, தூத்துக்குடியிலிருந்து கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், புதுக்கோட்டையிலிருந்து ரகுபதி, மெய்யநாதன், விருதுநகரிலிருந்து தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் என தலா 2 அமைச்சர்கள் உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் கோவி.செழியன், ராஜேந்திரன் சேர்க்கப்பட்டது மூலம் முதல்முறையாக தஞ்சை, சேலம் மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.

செந்தில் பாலாஜி, நாசர் சேர்க்கப்பட்டது மூலம் கரூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மீண்டும் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.

ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், திருவாரூர், திருவண்ணாமலை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒரு பிரதிநிதித்துவம் உள்ளது.
தமிழக அமைச்சரவை
தமிழ்நாடு அரசின் தலைமைக் கொறடா To அமைச்சர்... யார் இந்த கோவி. செழியன்?

எனினும் கோவை, நெல்லை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், செங்கல்பட்டு, தேனி, தென்காசி, விழுப்புரம், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com