சென்னை|இன்ஸ்டாவில் பழக்கமான நபரிடம் பேசிவருவதை கண்டித்த பெற்றோர்; வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள்!

இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபரிடம் பேசி வருவதை பெற்றோர்கள் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
எண்ணூர் பேருந்து நிலையம்
எண்ணூர் பேருந்து நிலையம்புதிய தலைமுறை
Published on

இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபரிடம் பேசி வருவதை பெற்றோர்கள் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து இரண்டு சிறுமிகள் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பழக்கமான ஆண் நபருடன் பேசி வந்துள்ளனர். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் கண்டித்ததால் இருவரும் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

புகாரின் பேரில் எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த தருண் என்பருடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததும், நேற்று பெற்றோர்களிடம் கோபித்துக் கொண்டு தருணை சந்திப்பதற்காக எண்ணூர் சென்றதும் தெரியவந்தது.

தருண் என்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தனக்கு நேற்று பிறந்தநாள் எனவும் அதற்காக இருவரும் தன்னை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக வந்ததாகவும், வாழ்த்து தெரிவித்துவிட்டு நேற்று மாலை வீட்டிற்கு செல்வதாக கூறி கோயம்பேடு பேருந்தில் இருவரும் ஏறி சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு பேருந்தில் ஏறியதாக சொல்லப்பட்ட சிறுமிகள் இருவரும் வீடு வந்து சேராததால் தருணை பிடித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com