ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் (World Food Program), ஆப்கனில் மனிதாபிமானம் குறைந்துவருவதாக கூறி அதுசார்ந்த தங்களின் வருத்தத்தை பதிவுசெய்திருக்கிறது. இதுதொடர்பான செய்தியில், ஆப்கன் மக்கள் உயிருடன் வாழ்வதற்காக தங்களது குழந்தைகளையும், அவர்களின் உடலையும் விற்பனை செய்ய வேண்டியிருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உலக உணவுத் திட்டத்தின் முதன்மை அதிகாரி டேவிட் பேஸ்லி தெரிவித்திருக்கும் தகவலில், ஆப்கனில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பசியால் வாடுகின்றனர் எனக்கூறி சர்வதேச நாடுகள் அனைத்தும் ஆப்கனுக்கான தங்களின் உதவி விநியோகத்தை விரைவுபடுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் கடந்த சில வருடங்களாகவே வறட்சி, பொருளாதார இழப்பு, கொரோனா பெருந்தொற்று, ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட இழப்புகள் என பலவற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 24 மில்லியன் மக்கள் ஆப்கனில் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த குளிர்காலத்தில் மட்டும் ஆப்கனில் சரிபாதி மக்கள் பஞ்சத்தாலும், இந்த வருடத்தில் 97% மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக டேவிட் பேஸ்லி தெரிவித்துள்ள தகவலில், “கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்களுடன் மோதியதில், ஆப்கானிஸ்தான் உலகளவில் ஏற்கெனவே மிகவும் வறுமையான நாடாகத்தான் இருக்கிறது. தற்போது அதுடன் சேர்ந்து பேரழிவும் ஏற்படுகிறது. அங்கு மொத்த 40 மில்லியன் மக்கள் இருக்கின்றனர் என்றால், அதில் 23 மில்லியன் மக்கள் பசியால் வாடுகின்றனர்” என தெரிவித்துள்ளார். மேலும், தான் ஆப்கனில் கண்ட ஒரு பெண் தனது குழந்தையை விற்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக வாக்குமூலம் தந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தை விற்பனையின் பின்னணியில், தங்களைவிட தங்கள் குழந்தைக்கு யாரால் கூடுதல் உணவளிக்க முடிகிறதோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக பெற்றோர்கள் சிலர் அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா அரசு ஆப்கனிலிருந்து வெளியேறியது அங்கு ஏற்பட்ட இந்த மிகப்பெரிய பஞ்சத்துக்கு காரணமென கணிக்கப்படுகிறது. அமெரிக்காவின் வெளியேற்றத்தால், பல சர்வதேச என்.ஜி.ஓ.க்களும் வெளியேறியிருந்தது