"பாலியல் அத்துமீறலா? - தொழில் செய்யும் இடங்களில் இந்த அமைப்பு இருக்கும்” - வழக்கறிஞர் அஜிதா விளக்கம்

நடிகைகளிடம் தவறாக அணுகும் நபர்களை செருப்பால் அடிக்க வேண்டும் நடிகர் விஷால் கூறியுள்ளார். விரைவில், நடிகர்கள் சங்கம் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஹேமா கமிட்டி அறிக்கை அண்மையில் வெளியாகிய நிலையில் கேரள திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மீது ஏராளமானோர் பாலியல் புகார்களை அளித்து வருகின்றனர். புகார் அளித்த நடிகைகளிடம், கேரள அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி ஏற்கனவே இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் நடிகர்கள் ஜெயசூர்யா, இடவேள பாபு மற்றும் கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ முகேஷ் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது.

நடிகைகளிடம் தவறாக அணுகும் நபர்களை செருப்பால் அடிக்க வேண்டும் நடிகர் விஷால் கூறியுள்ளார். விரைவில், நடிகர்கள் சங்கம் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்கறிஞர் அஜிதா புதிய தலைமுறைக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com